Saturday, March 30, 2013

நாயக்கர்



நாயக்கர்

கிருஷ்ணதேவராயன்


வீரபாண்டிய கட்டபொம்மன்,



திருமலை நாயக்கர்




இராணி மங்கம்மாள்




 

ஆந்திரா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் காணப்படும் ஆரியரல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களே நாயக்கர் இனத்தவர்கள். இவர்களின் தாய் மொழி தெலுங்கு. இவர்கள் தென்மாநிலங்களில் மக்கள் தொகையில் அதிகமாக காணப்படுகிறார்கள். இவர்கள் ஆதியில் காப்பு என்னும் இனத்தை சேர்ந்தவர்கள். காம்பு எனப்படும் பழங்குடி இனத்தவர்களின் மரபுகளாக அறியப்படுகிறார்கள். இவர்களே நாகர்கள் என்றும் இம்மக்கள் கூறுகிறார்கள்.
இவர்கள் நாயுடு, நாயக்கர், ரெட்டி, ராவ், ராயர், செட்டே, உடையார், ராயுடு என்று பலபெயர்களில் வாழுகிறார்கள். தமிழகத்தில் கொங்கு நாட்டுப் பகுதிகளான நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளிலும், தெற்கு பகுதியில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனீ, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளிலும், செஞ்சி, தஞ்சை, சென்னை, திருவள்ளூர் ஆகிய இடங்களிலும் அதிகமாக வாழுகிறார்கள். தமிழகத்தில் நாயக்கர் என்ற பட்டம் கொண்ட இனம் அல்லது கிளை இனம் தான் மக்கள் தொகையில் அதிக அளவில் உள்ளவர்கள். பொதுவாக நாட்டை ஆண்டவர்கள், பாளையத்தை ஆண்டவர்கள் (குறுநிலத்தை) நாயக்கர் என்று அழைக்கப்பட்டனர்.

ஆந்திராவில் மக்கள் தொகையில் அதிகமாக உள்ள காப்பு (ராஜ கம்பளம், பலிஜா, கவரா) போன்றோர்களும், தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட வன்னியர்களின் பெரும் பகுதியினர் வட தமிழகத்தில் நாயக்கர் என்ற பட்டத்தை பயன்படுத்துகின்றனர். கம்மவார், அகமுடையாரில் சிலர் போன்றோர்கள் நாயக்கர்களாக அறியப்படுகிறார்கள்.
நாயக்கர்களில் காப்பு இனத்தை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், கிருஷ்ணதேவராயன், திருமலை நாயக்கர், இராணி மங்கம்மாள், விருப்பாச்சி கோபால நாயக்கர் போன்ற அரசர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்பவர்கள்.

சொல்லிலக்கணம்

  • நாயக்கர் = தலைவன், வீரன், தந்தை, அனைத்திலும் முதல்வன், உயர்ந்தவன் என்று பல பொருள் படும்
  • நாயக்கடு = (தெலுங்கில் "நாயுடு " என்று ஆனது)
  • நாயக்கர் = நாயர் (மலையாளம்)
  • நாயக்கர் = நாயகே (சிங்களம்)
  • நாயக்கர் = நாயக் (மராத்தி)
  • நாயக்கர் = நாயக்ஸ், பட்டநாயக் (ஒரிசா)

மக்கள் தொகை

ஆந்திராவில் காப்பு நாயுடு இனத்தவர்கள் 29% பேர் உள்ளனர் அதாவது ஏறக்குறைய மூன்று கோடி அளவில் உள்ளனர். ஆந்திராவில் பெருன்பான்மை இனத்தவர்கள் இவர்களே. அதே போல தமிழகத்தில் அதிக மக்கள் தொகை இவ்வினத்தில் உள்ளனர். கருநாடகம், கேரளம் மற்றும் தென்னிந்தியா முழுவதும் இவர்கள் விரிந்து வாழுகிறார்கள். விடுதலைப் போராட்டத்தில் இம்மக்கள் பெருமளவில் பங்கெடுத்துள்ளனர்.

பிரிவுகள்

காப்பு எனப்படும் இனத்தில் உள்ள பிரிவுகள்

  1. காப்பு
  2. பலிஜா
  3. கவரா
  4. வெலமா
  5. தொட்டிய நாயக்கர்

காப்பு
ஆந்திராவில் வழங்கப்படும் பெயர். இவர்கள் முன்னேறிய சாதிகள் பிரிவில் உள்ளனர், உயர் சாதியினராக கருதப்படுகிறார்கள். காப்பு என்பதற்கு காவல் என்று பொருள். இம்மக்கள் அரசர்களாக இருந்ததால் இவர்களை காப்பு என்று அழைப்பர். காப்பு என்றால் காவல் காப்பவர்.
பலிஜா
பலிஜா என்பதற்கு பலம் பொருந்தியவர்கள் என்றும், வாணிகம் செய்தவர்கள் என்றும் இருவேறு பொருள் கூறுகிறார்கள். இம்மக்கள் பெரும்பாலும் வணிகம் சார்ந்தே வாழுகிறார்கள். இவர்கள் தென்னாடு முழுவதும் வாழுகிறார்கள். கவரா, வளையல் நாயக்கர், வடுகர் (கம்மவாரை தவிர்த்து)[1] ஆகியோர் பலிஜாவின் கிளை ஜாதியினர்.
தமிழ் நாட்டில் உள்ள நாயுடு இனத்தவரில் வெலமா என்பதும் ஒரு பிரிவாகும். உணவு தொடர்பான தொழிலில் பிரதானமாக விளங்குகிறார்கள். (உதாரணம்., அடையார் ஆனந்த பவன், வசந்த பவன், முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள்) காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் பத்ம வெலமா என்கிற பிரிவினர் திரளாக வசிக்கின்றனர்.
தெலுங்கில் தொட்டிய என்றால் பெரிய என்று பொருள். காப்பு இனத்திலேயே பழங்குடியினர்கள். தாங்கள் "'கம்பளம் என்ற நாட்டில் இருந்து வந்ததால் தங்களை ராஜ கம்பளத்தார் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். இம்மக்களே 90 லட்சம் பேருக்கு மேல் தமிழகத்தில் வாழுகிறார்கள். இவர்கள் தமிழ் கலந்த ஒரு விதமான ஆதி தெலுங்கைப் பேசுவர். வீரபாண்டிய கட்டபொம்மன் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்தவரே.
இவர்கள் பலிஜா வின் கிளை ஜாதியினர். இம்மக்கள் தங்களுக்கு என்று ஒரு கட்டுப்பாட்டை வெய்து கொள்வர், ஊர் பெரியவர் தான் இம்மக்களுக்கு குரு, இவரை '"ஊர் நாயக்கர்"' என்று அழைப்பர் .இவர்கள் கல்வி அறிவில் பின் தங்கி உள்ளனர். பெரும்பாலான தமிழக பாளையங்கள் இவர்களால் ஆளப்பட்டுள்ளன. 72 பாளையங்களாக இருந்த காலத்தில் 62 பாளையங்கள் இவர்களால் ஆளபட்டதே .விடுதலை போராட்டத்தில் பெருமளவு பங்கு பெற்றுள்ளனர். வரதட்சணை இல்லாத திருமணம், பழைய பழக்கம் எதனையும் மாற்றாத முறை, கூட்டு வாழ்kகை என்று கம்பளத்தார்கள் ஏனைய சமுதாயங்களில் இருந்து வேறுபட்டு பழமையோடு வாழுகிறார்கள்.
தொட்டிய நாயகர்களின் கிளை
தொட்டிய நாயக்கர்கள் தங்களை ஒன்பது குலங்களாக பிரித்து தங்கள் குலங்களுக்கு உள்ளாகவே திருமணம் செய்து கொள்வர். அந்த ஒன்பது கம்பளங்கள்:
  1. சில்லவார்
  2. கொல்லவார்
  3. தொக்கலவார்( முதாவுலுவார்)
  4. குரு சில்லவார்
  5. பாலவார்(பாளையகார்)
  6. பெல்லவார்
  7. மல்லவார்
  8. எற சில்லவார்
  9. மேகலவார்
இது இம்மக்களின் ஒன்பது குலங்கள். ஒன்பது குலத்தவரும் சேர்ந்து ராஜ கம்பளம் என்று தங்களை அழைத்துக் கொள்வர் .

குல தெய்வம்

பலிஜா

ரேணுகா அம்மா, எல்லம்மா, கனகம்மா, மீனாட்சி அம்மா, திருமால், மல்லன்னா, அங்கம்மா, நாகம்மா போன்ற தெய்வங்களை குல தெய்வங்களாக வணங்குவர் .

கவரா

அழகர் சாமி, சின்னம்மா, சென்னம்மா, மங்கம்மா, நாண்ணம்மா, மதுரை மீனாட்சி போன்ற தெய்வங்களை குல தெய்வமாக கொள்வர் .

ராஜ கம்பளத்தார்

ஜக்கம்மா இவர்களின் இஷ்ட மற்றும் குல தெய்வம், பொம்மன்னா, பொம்மக்கா, வீர சின்னையா, மல்லையா. போன்ற தெய்வங்களை வணங்குவர் .
பலிஜா, கவரா, ராஜ கம்பளம் சமுதாயத்தினர் தங்கள் முன்னோர்களை கடவுளாக வணங்கும் வழக்கம் உடையவர்கள். போரில் இறந்தவர்கள், தங்களுக்கு உதவிய ஏனைய சமுதாயத்தினரையே வணங்கும் பழக்கம் கொண்டவர்கள்.

கம்மவார் நாயக்கர்

கம்மவார், நாயுடு, சவுதாரி, நாயக்கர் என்று அழைக்கப்படும் இவர்கள் தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர் ,தேனி ,கோவை போன்ற பகுதிகளில் அதிக அளவில் வாழுகிறார்கள். அதிகம் கரிசல் நிலங்களில் வாழும் இவர்கள் மதுரை நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் குடியேறினர். தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்ட இவர்கள் குருமி என்ற இனத்தில் இருந்து வந்ததாக அறியப்படுகிறார்கள் .பாலநாடு என்ற பகுதியை இவர்கள் ஆண்டு வந்துள்ளனர் மேலும் காகதிய ,விஜயநகர மன்னர்கள் நாயக்கர் காலத்திலும் படை வீரர்களாக இருந்து வந்துள்ளனர். காப்பு இனத்தில் இருந்து மாறுபட்டாலும், கம்மகாப்பு என்ற இனம் ஆந்திரா பகுதியில் இன்றும் உள்ளது. தமிழகத்தில் இளையரசனேந்தல் ,நெய்க்காரப்பட்டி ஆகிய ஜமின்களை இவர்கள் ஆண்டு வந்துள்ளனர். ஆந்திரா மக்கள் தொகையில் 5% கொண்ட இவர்கள் அரசியலிலும், பொருளாதாரம், கல்வியிலும் முன்னேறிய மக்களாக உள்ளனர்,பல கல்வி நிறுவனகள், தொழிற்கூடங்கள் இவர்களால் நடத்தப்படுகின்றன.

முத்தரைய நாயக்கர்

பாளையக்கார நாயக்கர், சேர்வைக்காரர், அம்பலக்காரர், மூப்பனார், முத்துராஜா, முதிராஜு, வலையர் என்று பல பெயரோடு வாழும் இவர்கள் தமிழகத்திலும், ஆந்திராவிலும் கணிசமான அளவு வாழ்கிறார்கள். புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சிவகங்கை, ராஜபாளையம், வேலூர் போன்ற பகுதிகளில் பெரும்பான்மையாக வாழும் இவர்கள் தமிழ், தெலுங்கு மொழிகளைத் தாய் மொழிகளாகக் கொண்டவர்கள். ஆந்திராவில் சத்திரியர் என அழைக்கப்படும் இவர்கள் குறு நில மன்னர்களாகவும், பாளையக்காரர்களாகவும் இருந்துள்ளனர். களப்பிரர் ஆட்சிக் காலம் இவர்களுடையது என்று நம்பப்படுகிறது. இவர்கள் தமிழுக்கும், ஆன்மிகத்துக்கும் அறிய பல தொண்டுகள் செய்துள்ளனர். வீரபாண்டிய கட்டபொம்மன் ராஜகம்பளம் இனத்தில் பிறந்தார், 'ராஜகம்பளம் முத்தரைய இனத்தின் உட்பிரிவாக கருதப்படுவதால் கட்டபொம்மனை இவர்களும் உரிமைக்கொள்கிறார்கள் .

பிற நாயக்கர்கள்

அகமுடைய நாயக்கர், வெற்றிலைக்கார நாயக்கர், உப்பிலிய நாயக்கர், உரிகார நாயக்கர், துளுவ நாயக்கர், தொழுவ நாயக்கர், காட்டு நாயக்கர், சேர்வை நாயக்கர், கொங்கு நாயக்கர் போன்றோர்கள் எண்ணிக்கையில் சிறிய அளவில் இருந்தாலும் பல பெயரோடு தமிழகம், ஆந்திரா , கருநாடகம் முழுவதும் பரவி வாழ்கிறார்கள்.

நாயக்கர்கள் கட்டிய கோவில்கள், கோட்டைகள்

நாயக்கர்கள் கட்டிய கோவில்கள்

  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் - விசுவநாத நாயக்கர்
  • ஆயிரங்கால் மண்டபம், வீர வசந்தியர் மண்டபம், வசந்த மண்டபம் - திருமலை நாயக்கர்
  • கிளி கூடு மண்டபம், தெப்பகுளம், மீனாட்சி நாயக்கர் மண்டபம் -- ராணி மங்கம்மாள்
  • திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் - ராஜ கோபுரம் ,
அண்ணாமலை கோபுரம், ஆயிரங்கால் மண்டபம், கோவில்குளம் --- கிருஷ்ணதேவராயர்
  • காளகஸ்தி கோவில் - 120 அடி கோபுரம் , 100 கால் மண்டபம் -- கிருஷ்ணதேவராயர்
காஞ்சி ஏகாம்பரீசுவர் கோவில் -- 192 அடி கோபுரம், 100 கால் மண்டபம் , வரதராஜ கோவில்
  • திருவரங்கம் கோவில் - குதிரை மண்டபம், கருட மண்டபம், சந்திர சூர்ய புஷ்கரணி குளம்
  • மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்
  • திருச்சி உச்சி பிள்ளையார் கோவில்
  • வண்டியூர் மாரியம்மன் கோவில்
  • திருப்பதி எழுமலையான் கோவில் - படிகட்டுகள் , தற்போதைய கோபுரம்
கல்யாண மண்டபம் , வசந்த மண்டபம், ராய கோபுரம் -- ஸ்ரீ கிருஷ்ண தேவ ராயர்
இது மட்டும் அல்லாது சிறு மற்றும் பெரிய கோவில்கள் பலவற்றை விஜயநகர, நாயக்கர் மன்னர்களால் கட்டப்பட்டுள்ளன, பழைய கோவில்களையும் இம்மன்னர்கள் புதுப்பித்து ஆன்மிகத்துக்கு அரிய பல தொண்டுகளை செய்து உள்ளனர் .

நாயக்கர்கள் கட்டிய கோட்டைகள் :

நாயக்கர் ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான கோட்டைகள் கட்டப்பட்டன, நாட்டின் பாதுகாப்புக்கும், எதிரிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றவும் பல கோட்டைகள் நாயக்கர் கால ஆட்சியில் கட்டப்பட்டன. அவற்றுள் சில பிரபலமான கோட்டைகள் :
  • திருச்சி மலைக்கோட்டை - விசுவநாத நாயக்கரால் கட்டப்பட்டது - புகழ் பெற்ற கோட்டை
  • நாமக்கல் கோட்டை - ராமச்சந்திர நாயக்கர் - 16 ஆம் நூற்றாண்டு - குறுநில மன்னர்
  • திண்டுக்கல் கோட்டை - முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் - 16 ஆம் நூற்றாண்டு
  • வேலூர் கோட்டை - சின்ன பொம்மி நாயக்கர், திம்ம ரெட்டி நாயக்கர் - 15 ஆம் நூற்றாண்டு
  • உதயகிரி கோட்டை - கஜபதி ராயர்
  • சங்ககிரி கோட்டை - 15 ஆம் நூற்றாண்டு

17 comments:

  1. அருமையான பதிவு மற்றும் பணி வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Dear Soundhar pandi
      You give any article related to this blog

      Delete
  2. very useful and and good for this kammavar naidu people

    ReplyDelete
  3. துளுவ நாயக்கர் தமிழா?

    ReplyDelete
  4. உப்பிலியர் க்கும் நாயக்கருக்கும் என்ன சம்மந்தம் உங்க கதைக்கு அளவு இல்லையா உவர்உப்பு விளைக்கும் தமிழர்குடி இவர்கள் உப்பளவன் உப்பிலியர்

    ReplyDelete
    Replies
    1. இது தவறான வரலாறு உப்பிலியர் தமிழன் உப்பிலியர் க்கும் நாயக்கர்களும் ௭ன்ன சம்பந்தம்..

      Delete
  5. தமிழ் உப்புலியர் சாதியை திட்டமிட்டே அழிக்க பார்க்கிறார்கள் அதாவது உப்பாரா சகாரா உப்பிலிய நாயுடு கவரை உப்பிலியர் உப்பிலிய நாயக்கர் இத்தனையும் திட்டமிட்டு ( தமிழ் உப்புலியர் சாதி பெயரை அழித்து) இணைத்துள்ளார்கள் தமிழ் மூத்தகுடி (உப்புலியர்)மக்களுக்கு உப்பிலிய நாயக்கர் என்று சங்கம் வைத்து நடத்தி கொண்டு (தமிழ் உப்புலியர் சாதி மக்களை) தெலுங்கு சாதி மக்ககளாக மாற்ற திட்டம் தீட்டி கொண்டு இருக்கிறார்கள் தமிழ் மொழியை தாய் மொழியாக பேசும் இந்த (உப்புலியர் மக்கள் ) உலகத்தில் முதன்முறையாக (தமிழ் நாட்டில் உப்பு உவர் மண்ணிலும் கடலிலும் கண்டுபிடித்து உற்பத்தி செய்தார்கள்) ஆனால் இந்த உப்பிலிய நாயக்கர் என்பது சாதி பெயர் இல்லை இந்த உப்பிலிய நாயக்கர் என்கிற பொய்யான சாதி தெலுங்கு நாயக்கர் பிரிவுகளில் கூட இந்த உப்பிலிய நாயக்கர் என்ற பெயர் இல்லை மேலும் உப்பிலிய நாயக்கர் என்பதற்கு ஆதாரம் குட்டி சுவர் கூட தமிழ் நாட்டில் இல்லை எதோ பொய்யான வரலாறு சொல்லி (தமிழ் உப்புலியர் மக்களை )உப்பிலிய நாயக்கர் என்று நம்ப வைக்கிறார்கள்ஆகவே உப்புலியர் மக்களே (உப்புலியர்) என்று சொல்லுங்கள்
    குறிப்பு
    தமிழ் மொழியை தாய் மொழியாக பேசும் உப்புலியர் மக்கள் எப்படி தெலுங்கு மக்களாக மாறுவார்கள் தமிழ் மொழியை தாய் மொழியாக பேசுபவர்கள் தான் தமிழர்கள் இப்படி இருக்குறப்ப இந்த உப்புலியர் மக்கள் தமிழ் மொழியை தாய் மொழியாக பேசுபவர்கள் தமிழ் நாட்டில் பரவலாக நிரந்தரமாக வாழ்ந்து வருகிறார்கள் உப்புலியர் மக்களே உப்புலியர் என்று உண்மையாக உயர்வாக பெருமையாக சொல்லுங்கள் மீண்டெழுங்கள் தமிழ் மூத்தகுடி உப்புலியர் மக்கள் என்று உப்புலியர் வம்சம் ������������

    ReplyDelete
  6. தமிழ் உப்புலியர் சாதியை திட்டமிட்டே அழிக்க பார்க்கிறார்கள் அதாவது உப்பாரா சகாரா உப்பிலிய நாயுடு கவரை உப்பிலியர் உப்பிலிய நாயக்கர் இத்தனையும் திட்டமிட்டு ( தமிழ் உப்புலியர் சாதி பெயரை அழித்து) இணைத்துள்ளார்கள் தமிழ் மூத்தகுடி (உப்புலியர்)மக்களுக்கு உப்பிலிய நாயக்கர் என்று சங்கம் வைத்து நடத்தி கொண்டு (தமிழ் உப்புலியர் சாதி மக்களை) தெலுங்கு சாதி மக்ககளாக மாற்ற திட்டம் தீட்டி கொண்டு இருக்கிறார்கள் தமிழ் மொழியை தாய் மொழியாக பேசும் இந்த (உப்புலியர் மக்கள் ) உலகத்தில் முதன்முறையாக (தமிழ் நாட்டில் உப்பு உவர் மண்ணிலும் கடலிலும் கண்டுபிடித்து உற்பத்தி செய்தார்கள்) ஆனால் இந்த உப்பிலிய நாயக்கர் என்பது சாதி பெயர் இல்லை இந்த உப்பிலிய நாயக்கர் என்கிற பொய்யான சாதி தெலுங்கு நாயக்கர் பிரிவுகளில் கூட இந்த உப்பிலிய நாயக்கர் என்ற பெயர் இல்லை மேலும் உப்பிலிய நாயக்கர் என்பதற்கு ஆதாரம் குட்டி சுவர் கூட தமிழ் நாட்டில் இல்லை எதோ பொய்யான வரலாறு சொல்லி (தமிழ் உப்புலியர் மக்களை )உப்பிலிய நாயக்கர் என்று நம்ப வைக்கிறார்கள்ஆகவே உப்புலியர் மக்களே (உப்புலியர்) என்று சொல்லுங்கள்
    குறிப்பு
    தமிழ் மொழியை தாய் மொழியாக பேசும் உப்புலியர் மக்கள் எப்படி தெலுங்கு மக்களாக மாறுவார்கள் தமிழ் மொழியை தாய் மொழியாக பேசுபவர்கள் தான் தமிழர்கள் இப்படி இருக்குறப்ப இந்த உப்புலியர் மக்கள் தமிழ் மொழியை தாய் மொழியாக பேசுபவர்கள் தமிழ் நாட்டில் பரவலாக நிரந்தரமாக வாழ்ந்து வருகிறார்கள் உப்புலியர் மக்களே உப்புலியர் என்று உண்மையாக உயர்வாக பெருமையாக சொல்லுங்கள் மீண்டெழுங்கள் தமிழ் மூத்தகுடி உப்புலியர் மக்கள் என்று உப்புலியர் வம்சம் 🐅🐅🐅🐅🐅🐅

    ReplyDelete
  7. செட்டிபலிஜா,ஜனப்பலிஜா,காஜூலுபலிஜாபெரிக்காபலிஜா,உப்புபலிஜா,லிங்கபலிஜா,ஓடபலிஜா,தேகட்டபலிஜா இவர்கள் தான் உண்மையான பிறவி பலிஜாக்கள்.மற்றவர்கள் அனைவரும் கிருஷ்ணதேவராயர் காலத்தில்சேர்க்கப்பட்டவர்கள் ஆவார்கள்.தமிழ்நாட்டில் செட்டிபலிஜா என்றதெலுங்குசெட்டி மற்றும் காஜூலுபலிஜா என்ற வளையசெட்டி பலிஜநாயுடு கவரநாயுடு இவர்கள் மட்டுமே பலிஜாக்கள்வேறுவேறு யாரும் கிடையாது.

    ReplyDelete
  8. Janaba is not come under the balija banner it's absolute wrong the belongs to sadhu chetty @ Telugu patty chetty.MBC grade in tamilnadu.they are petty hawker and labour in balija.kapu.and muslim people's tradings.bussiness.industry.farms
    No way of connection balija Naidu.and balija shetty.because.balijas forward caste people's and vijayanagara dynastical emphrere kings and ruling people s...

    ReplyDelete
    Replies
    1. நல்ல வரலாற்று காமெடி. ஜனப்பர் என்பதன் பொருள் உயர்மக்கள் என்பது.(ஜன என்றால் மக்கள் பன் என்றால் உயர்).இவர்கள் தமிழ்நாட்டில் 24மனைதெலுங்குசெட்டிகள் ஆவர்கள். ஜனபன் பலிஜாவின் மிக பெரிய தனிகிளையாக உருகிஉள்ளது என எட்கர்தர்சன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.ஜனப்பன் என்பவர்களே வலங்கை பிரிவின் தலைவன். மேலும் தெலுங்கு பட்டி செட்டி என்பவர்கள் 1982 வரை 24மனை தெலுங்குசெட்டி பிரவிலே இருந்தார்கள். அதன் பிறகு அவர்கள் mbcல் சேர்க்கப்பட்னர். தெலுங்குபட்டிசெட்டி என்பவர்ள் 24மனைதெலுங்குசெட்டி இனத்தவர்கள் தான்.தெலுங்கு பட்டி செட்டிகள் ஆந்திராவில் பட்டிபலிஜா எனவும் பட்டிசெட்டிகள் எனவும் அழைக்கப்படகிறார்கள்.இவர்கள் பருத்தி வணிகர்களாக உள்ளனர்.மேலும் 24மனை தெலுங்கு செட்டிகள் பலிஜாவில் மிக பெரிய தனி கிளையாக தனியாக உள்ளனர்.நீங்கள் கூறிய ஒரு விசியத்திற்கு கூட ஆதாரம் இல்லை. ஆனால் நான் கூறியதற்கு பல ஆதாரம் உள்ளது. இனி ஆதாரம் இல்லாத தகவலை பதிவிட வேண்டாம்.

      Delete
  9. தெலுங்கு chetty is a separate caste.they are Sudras small hawker business doers,the sold kumkum.turmerics,some people's doing labourers in balija naidus.balija Shetty's.kapu.kamma Naidu s.enterpreneurship s.it's a labour class balijas are not accepted.the telnku chettys as their equal hence balijas is superior as like as Arya Vysya komutti grarde
    Because balijas are lunar dynasty ethnical base kingdom Vysya Kshatriyas but brahminical conceptualism followrts their status is bunt like grade in Karnataka uppu balijas are also superiar rathar than Telugu chettys
    Edgar thurstan says in his book caste and tribes in South India book rectify it in the above comment telungu chettys .janapa chettys are Sudras no way of connection of balijas
    Because the word balija is FC Grade.

    ReplyDelete
  10. வரலாறு தெரியாத உங்கள் அறியாமையை சிரிப்பதா. அழுவதா. வருத்தப்படுவதா என்றே தெரியவில்லை. உப்பு வணிகர்கள் என்பவர்கள் பெரிக்கபலிஜா ஆவர்கள்.இவர்களுக்கும் தெலுங்குசெட்டிகளுக்கும் ஆதிகாலத்திலிருந்தே புராணவரலாறு ஒன்றாகவே உள்ளது. மேலும் தெலுங்குசெட்டி சாதுசெட்டி செட்டிபலிஜா என்பவர்கள் ஆந்திரசாதிபட்டியலில் பலிஜா இனத்திலியே உள்ளனர். இதை தெரிந்து கொள்ள ஆந்திர 2005சாதபட்டியலை பார்க்க. தெலுங்குசெட்டியை பலிஜா இல்லை என்று சொல்ல முடியாது. அப்படி சொல்ல உங்களிடம் தவிர்க முடியாத ஆதாரம் என்ன இருக்கிறது காண்பிக்கவும்.மேலும் ஜனப்பன் என்பவர்களும் இருபத்திநாலுமனை தெலுங்குசெட்டிகளே இவர்களும் பலிஜா இனத்தை சார்ந்தவர்களே இவர்கள் பலிஜா இனத்தில் மிகபெரிய கிளையாக பிரிந்தவர்கள் என்று எட்கர் தர்சன் தனது நலில் குறிப்பிட்டுள்ளார். இதை இல்லை என்று யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. FC ல் இருந்தால் சலுகை கிடைக்காததால் தெலு்குசெட்டி சாதுசெட்டி செட்டிபலிஜா மற்றும் காஜூலுபலிஜா போன்றவர்கள் ஆந்திரஅரசுக்கு கோரிக்கை வைத்து பிசி வாங்கி உள்ளனர். இதை 2005 ஆந்திர பலிஜா சாதிபட்டியல் உறுதி செய்யும்.மேலும் மேற்சொன்ன பலிஜா இனத்தவர்கள் பலிஜா எனவும் சாதிசான்றிதல் வாங்கலாம். மேலே சொன்ன தனி பரிவாகவும் வாங்கலாம். பலிஜா என்பது எவ்சி தனிபிரிவாக வாங்கினால் அது பிசி அவ்வளவு தான். பிறகு கோமுட்டிகள் எப்போது பலிஜா ஆனர்கள் அவர்கள் எந்த மாநில சாதிபட்டியலில் பலிஜாவில் சேர்க்கப்பட்டுள்ளனர் இதை ஆதாரத்துடன் சொல்லவும். ஆதாரம் இல்லாமல் எதையும் கூற வேண்டாம். இங்கு வரலாறுகளை முடிவு செய்வது வாய்சொல் அல்ல.கல்வெட்டுகள் பட்டையம் செப்பேடு கடைசியாக புத்தக ஆவணம் தான். இனி இது போன்ற செய்திகளை ஆதாரம் இல்லாமல் பதிவிட வேண்டாம்.

    ReplyDelete
  11. Harrah's Cherokee Casino - The JetBlue Group
    Located minutes from 보령 출장마사지 downtown Asheville, Harrah's Cherokee Casino is 영주 출장마사지 within 경주 출장안마 a 10-minute walk of Choctaw Casino 상주 출장안마 and the Smoky Mountains, within a 10-minute drive 김천 출장마사지

    ReplyDelete